ADDED : ஆக 15, 2024 12:10 AM
சென்னை, ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை விரிவாக்கம் செய்யப்படுகிறது.
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தென் சென்னையின் முக்கிய நீர்வழிப்பாதையாக விளங்கும் ஒக்கியம் மடுவு பாலம், பருவமழை வெள்ளத்தை தாங்கும் வகையில் இல்லை. நீர்வழிப்பாதை 80 மீட்டர் நீளமும், அதன் உயரமும் குறைவாகவே உள்ளது.
இதை 200 மீட்டர் நீளம், 1.5 மீட்டர் உயரத்திற்கு மேம்படுத்த, மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் தடுக்க அகலமான நீர்வழிப்பாதையுடன் புதிய பாலம் கட்டிய பின், தற்போதுள்ள பாலத்தை இடித்து அகற்றும் பணியும் இதில் அடங்கும்.
ஒக்கியம் மடுவுக்கு குறுக்கே நீர்வழிப்பாதையை 200 மீட்டராக அகலப்படுத்தும் வகையில் சாலை பணி நடக்கும். எதிர்கால கனமழையை, சிறப்பாக தாங்கும் வகையில் இப்பாலம் கட்டமைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.