ADDED : ஏப் 28, 2024 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அண்ணா நகர்:அண்ணா நகர் 19வது தெருவைச் சேர்ந்தவர் நாகம்மாள், 67. இவர், 25ம் தேதி இரவு கடைக்கு சென்று விட்டு அண்ணா நகர், ஜி - பிளாக் வழியாக வீட்டிற்கு நடந்து சென்றார்.
அப்போது பைக்கில் வந்த மர்ம நபர்கள், நாகம்மாள் பின்னால் சென்று அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் நகையை பறித்து தப்பிச் சென்றனர்.
இதுகுறித்த புகாரையடுத்து, சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளின்படி, அண்ணா நகர் போலீசார் விசாரித்தனர்.
இதில், அண்ணா நகரைச் சேர்ந்த சின்னா, 28, என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இவரிடம் இருந்து 3 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

