ADDED : ஏப் 27, 2024 12:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேடவாக்கம், மேடவாக்கம் அடுத்த நன்மங்கலம், கோவளம் தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜன், 36.
நேற்று முன்தினம் வேலை முடிந்து இரவு 9:00 மணி அளவில் துரைப்பாக்கம் --பல்லாவரம் ரேடியல் சாலை வழியாக  ஸ்பிளன்டர் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினார்.
அப்போது, பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியதில் பாண்டியராஜன் படுகாயம் அடைந்தார்.
அருகிலிருந்தோர் அவரை மீட்டு பள்ளிகரணை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்ததில் வழியிலேயே உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

