/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
10 ஸ்டேஷனுக்கு ஒரே ஒரு இன்ஸ்பெக்டர் பெண்கள் புகார் மீதான நடவடிக்கை தாமதம்
/
10 ஸ்டேஷனுக்கு ஒரே ஒரு இன்ஸ்பெக்டர் பெண்கள் புகார் மீதான நடவடிக்கை தாமதம்
10 ஸ்டேஷனுக்கு ஒரே ஒரு இன்ஸ்பெக்டர் பெண்கள் புகார் மீதான நடவடிக்கை தாமதம்
10 ஸ்டேஷனுக்கு ஒரே ஒரு இன்ஸ்பெக்டர் பெண்கள் புகார் மீதான நடவடிக்கை தாமதம்
ADDED : ஆக 19, 2024 01:48 AM
சென்னை:தாம்பரம் காவல் ஆணையரகம், 2022 ஜன., மாதம் உருவாக்கப்பட்டது. இதில், தாம்பரம், பள்ளிக்கரணை ஆகிய காவல் மாவட்டங்களில், 22 காவல் நிலையங்கள் உள்ளன.
பள்ளிக்கரணை காவல் மாவட்டத்தின் 10 காவல் நிலையங்களுக்கு, சேலையூர், கேளம்பாக்கம், கண்ணகி நகர் ஆகிய மூன்று மகளிர் காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டன.
தீர்வு தேடும் மகளிர்
இதில், கண்ணகி நகரில் ஆறு மாதங்களாக காவல் ஆய்வாளர் பணியிடம் காலியாக உள்ளது. கேளம்பாக்கத்திற்கு காவல் ஆய்வாளர் நியமிக்கவில்லை.
இதனால், சேலையூர் மகளிர் காவல் ஆய்வாளர், சிட்லப்பாக்கம், தாழம்பூர், கானத்துார் உட்பட 10 காவல் நிலையங்களை சேர்த்து பார்க்கிறார்.
கண்ணகி நகர், பெரும்பாக்கம், பள்ளிக்கரணை ஆகிய காவல் நிலைய எல்லைகளில், அடர்த்தியான குடியிருப்புகள் உள்ளதால், மக்கள் தொகை அதிகம்.
இங்கு, குடும்ப பிரச்னை, பாலியல் தொல்லை போன்ற புகார்களுக்கு தீர்வு தேடி, மகளிர் காவல் நிலையம் செல்கின்றனர்.
கோரிக்கை
மேலும், இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆர்., பகுதிகளில், ஐ.டி., நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளதால், அங்கிருந்தும் பெண்கள் சார்ந்த புகார்கள் அதிகமாக பதிவாகின்றன.
ஓராண்டாக, ஒவ்வொரு மகளிர் காவல் நிலையங்களிலும், 3 முதல் 5 போக்சோ வழக்குகள் பதிவாகின்றன.
கணவர், சகோதரர்கள்,உறவினர்களுடன் ஏற்படும் கருத்து வேறுபாட்டால் ஏற்படும் பிரச்னைக்கு, காவல் நிலையத்தில் தீர்வு தேடுவதும் அதிகரித்து உள்ளது.
சில புகார்களை, பெண் காவல் ஆய்வாளர் விசாரிக்க வேண்டும் என பெண்கள் எதிர்பார்ப்பர். ஆனால், காவல் ஆய்வாளர்கள் பற்றாக்குறையால், பெண்களுக்கு உடனடி தீர்வு கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.
எனவே, அனைத்து காவல் நிலையங்களுக்கும் பெண் காவல் ஆய்வாளர் உட்பட பெண் போலீசார் நியமிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

