/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
4 ரேஷன் கடை வேளச்சேரியில் திறப்பு
/
4 ரேஷன் கடை வேளச்சேரியில் திறப்பு
ADDED : ஆக 20, 2024 12:57 AM
வேளச்சேரி,
அடையாறு மண்டலம், 172, 175 ஆகிய வார்டுகளில், நான்கு ரேஷன் கடைகள் மிகவும் மோசமான நிலையில் இருந்தன. இதனால், ஒவ்வொரு மழைக்கும் பொருட்கள் சேதமடைந்தன. இதையடுத்து, புதிய கட்டடம் கட்ட மாநகராட்சி முடிவு செய்தது.
வார்டு 172, கன்னிகாபுரத்தில் 30 லட்சம் ரூபாய் செலவில், 700 சதுர அடி பரப்பில், ஒரு கடை கட்டப்பட்டது. மேலும், 175வது வார்டு, டி.என்.எச்.பி., காலனியில் 28.60 லட்சம் ரூபாய் செலவில், 900 சதுர அடி பரப்பில், அடுத்தடுத்து இரண்டு கடைகள் கட்டப்பட்டன.
அதே வார்டு கக்கன் நகரில் 27 லட்சம் ரூபாய் செலவில், 700 சதுர அடி பரப்பில் ஒரு கடை கட்டப்பட்டது. நான்கு ரேஷன் கடைகளையும், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், நேற்று திறந்து வைத்தார்.