/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஜப்பான் வீரரிடம் இன்று நீச்சல் கற்க வாய்ப்பு
/
ஜப்பான் வீரரிடம் இன்று நீச்சல் கற்க வாய்ப்பு
ADDED : ஜூன் 04, 2024 12:25 AM
சென்னை, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும், ஜப்பானின் ஒகாசாகி டட்சுகி நீச்சல் கிளப்பும் இணைந்து, நீச்சல் பயிற்சியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு, ஜப்பானின் புகழ்பெற்ற நீச்சல் வீரர் யூமா எடோ வழங்கும்பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.
இதுகுறித்து, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தமிழக வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு, சர்வதேச விளையாட்டு அறிவை வளர்க்கும் வகையில், சென்னை, வேளச்சேரி நீச்சல் குள வளாகத்தில் இன்று ஒருநாள் தனித்துவ பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
சர்வதேச நீச்சல் வீரர் யூமா எடோ, இதில் பங்கேற்று, நீச்சல் நுட்பங்கள், அனுபவங்களுடன் கூடிய நுணுக்கங்களை பகிர உள்ளார்.
அதன்படி, காலை 9:00 மணி முதல் 11:00 மணி வரை, 30 நீச்சல் பயிற்றுனர்களுக்கு, அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தல், பயிற்சியாளர்களின் உடல்நலம், சத்துணவுகள் உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்கிறார்.
மாலை 5:00 மணி முதல் 7:30 மணி வரை, 50 நீச்சல் மாணவர்களுக்கு நீச்சல் வீரராவது எப்படி, நீச்சல் நுட்பங்கள் என்னென்ன, டைவ் அடிப்பது எப்படி உள்ளிட்ட நுணுக்கங்களை கற்பிக்க உள்ளார்.
இதில் சேர, 77087 60601 என்ற மொபைல் எண்ணிலோ, aquaticchennai@gmail.com மற்றும் manojjayakumar@outlook.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்புகொள்ளலாம்.