/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரேஷன் கடை இடமாற்றத்திற்கு எதிர்ப்பு
/
ரேஷன் கடை இடமாற்றத்திற்கு எதிர்ப்பு
ADDED : பிப் 27, 2025 12:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி,
ஆவடி மாநகராட்சி 3வது வார்டு, மிட்டனமில்லி, கற்பகாம்பாள் தெருவில், ரேஷன் கடை செயல்பட்டு வந்தது. இதை, சி.ஆர்.பி.எப்., நகரில் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தில் இடமாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மிட்டனமில்லி, பள்ளிக்கூடம் தெருவில், அப்பகுதிவாசிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர்.
இதுகுறித்து, விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.

