/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மணலியை பிற மண்டலங்களுடன் இணைக்க எதிர்ப்பு: வளர்ச்சி பாதிக்கும் என்பதால் மறுபரிசீனை செய்ய வலியுறுத்தல்
/
மணலியை பிற மண்டலங்களுடன் இணைக்க எதிர்ப்பு: வளர்ச்சி பாதிக்கும் என்பதால் மறுபரிசீனை செய்ய வலியுறுத்தல்
மணலியை பிற மண்டலங்களுடன் இணைக்க எதிர்ப்பு: வளர்ச்சி பாதிக்கும் என்பதால் மறுபரிசீனை செய்ய வலியுறுத்தல்
மணலியை பிற மண்டலங்களுடன் இணைக்க எதிர்ப்பு: வளர்ச்சி பாதிக்கும் என்பதால் மறுபரிசீனை செய்ய வலியுறுத்தல்
UPDATED : மார் 03, 2025 04:44 AM
ADDED : மார் 02, 2025 11:52 PM

மணலி: மாநகராட்சி மண்டலங்கள் 20 ஆக உயர்த்தப்பட்டாலும், ஏற்கனவே உள்ள மணலி மண்டலமாக காணாமல் போகிறது. மணலி மண்டல வார்டுகளை திருவொற்றியூர், மாதவரம் மண்டலங்களுடன் இணைப்பதற்கு, அப்பகுதி மக்கள், வணிகர்கள், கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சி, மணலி மண்டலத்தில், 15 முதல் 22 வரை என, எட்டு வார்டுகள் உள்ளன. 42.24 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட இங்கு, 1.02 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். மக்கள் தொகை குறைவானாலும், மற்ற மண்டலங்களை காட்டிலும், பரப்பளவில் பெரியது.
சட்டசபை தொகுதி அடிப்படையில், 15வது வார்டு, பொன்னேரி தொகுதியிலும், 16, 17 , 19 ஆகிய வார்டுகள் மாதவரம் தொகுதியில் அடங்கும். மேலும், 18, 20, 21, 22 ஆகிய நான்கு வார்டுகள் திருவொற்றியூர் தொகுதிக்குள் வரும்.
சென்னை மாநகராட்சி மண்டலங்கள் எண்ணிக்கை, 15 ல் இருந்து, 20 ஆக உயர்த்தப்பட்டது. புதிதாக ஆறு மண்டலங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதில், எட்டு வார்டுகளை கொண்ட மணலி என்ற மண்டலம் காணாமல் போகிறது.
இந்த மண்டலத்தில் உள்ள, 15,16, 18, 20, 21 ஆகிய ஐந்து வார்டுகள் திருவொற்றியூர் மண்டலத்திலும், 17, 19, 22 ஆகிய மூன்று வார்டுகள் மாதவரம் மண்டலத்தில் இணைக்கப்படுகின்றன. இதன்படி, 19 வார்டுகளுடன் மாநகராட்சியில் அதிக வார்டுகளை கொண்ட மண்டலமாக திருவொற்றியூர் மாறியுள்ளது.
பொன்னேரி, மாதவரம் தொகுதிக்குட்பட்ட 15, 16 வது வார்டுகள், திருவொற்றியூர் மண்டலத்திலும்; திருவொற்றியூர் தொகுதியின், 22 வது வார்டு மாதவரம் மண்டலத்திலும் சேர்த்துள்ளது, நிர்வாக ரீதியாக குளறுபடியை ஏற்படுத்தும்.
மேலும், 1968 ல் பேரூராட்சியாக இருந்து, தற்போது, சென்னை மாநகராட்சியின், 2வது மண்டலமாக மணலி மாறியுள்ளது. தொழிற்சாலைகளும், வருவாயும் மிக அதிகம். இந்நிலையில், இந்த மண்டலத்தை வேறு மண்டலங்களுட்ன இணைப்பது சரியாக இருக்காது என, அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
புழல் மற்றும் கொசஸ்தலை உபரி கால்வாய்களால், ஆண்டுதோறும் வெள்ளபாதிப்பு ஏற்பட்டு, மணலி தீவு போல் மாறிவிடும். அதிகாரிகள் உட்பட யாரும் நுழைய முடியாது. அதுபோன்ற நேரங்களில், மணலியை நிர்வகிக்க தனி நிர்வாகம் அவசியம்.
திருவொற்றியூருடன் இணைத்தால், மணலிக்கு முக்கியத்துவம் இருக்காது; தவிர, வளர்ச்சி பணிகளும் பாதிக்கும். மண்டலத்தை காலி செய்து, பிற மண்டலங்களுடன் இணைப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, அப்பகுதி மக்கள், வணிகர்கள், கவுன்சிலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

