/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பஸ் கவிழ்ந்து பெயின்டர் சாவு ரூ.32.24 லட்சம் இழப்பீடு
/
பஸ் கவிழ்ந்து பெயின்டர் சாவு ரூ.32.24 லட்சம் இழப்பீடு
பஸ் கவிழ்ந்து பெயின்டர் சாவு ரூ.32.24 லட்சம் இழப்பீடு
பஸ் கவிழ்ந்து பெயின்டர் சாவு ரூ.32.24 லட்சம் இழப்பீடு
ADDED : ஜூன் 19, 2024 12:30 AM
சென்னை,
தண்டலம் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்ததில் உயிரிழந்த பெயின்டரின் குடும்பத்தினருக்கு, 32.24 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் இருந்து கூடப்பாக்கம் நோக்கி, 'ஸ்ரீ பாரதி ரோடுவேஸ்' என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான பேருந்து, 2019 செப்.,9ல் சென்று கொண்டிருந்தது. தண்டலம் அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த ஓடையில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
இதில், பேருந்தில் பயணித்த பெயின்டர் விஜயகுமார், 32 என்பவர் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதையடுத்து கணவரின் இறப்புக்கு 49 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில், விஜயகுமாரின் மனைவி சுதா உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு, சிறு வழக்குகளுக்கான நீதிமன்ற முதன்மை நீதிபதி டி.லிங்கேஸ்வரன் முன் நடந்தது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, 'அதிவேகம், அஜாக்கிரதையாக பேருந்தை இயக்கியதால், சாலையோரம் இருந்த ஓடையில் கவிழ்ந்துள்ளது. எனவே, மனுதாரருக்கு 32.24 லட்சம் ரூபாய் இழப்பீடாக, ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டார்.