/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குன்றத்துார் சாலையில் மாடுகளால் பீதி
/
குன்றத்துார் சாலையில் மாடுகளால் பீதி
ADDED : ஆக 05, 2024 01:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார், குன்றத்துார் - போரூர் நெடுஞ்சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.
இத்தடத்தில் மவுலிவாக்கம், கோவூர் மேம்பாலத்தின் கீழ் திரியும் மாடுகள் மற்றும் நாய்கள், சாலை நடுவே திடீரென வருவதால், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்தில் சிக்கி காயமடைகின்றனர்.
குறிப்பாக இரவில், இச்சாலையில் செல்லவே அச்சமாக உள்ளது.
சாலையில் திரியும் மாடுகள், நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.