sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் கூடுதல் ரயில் இயக்க கோரிக்கை நெரிசலில் பயணியர் கடும் அவதி

/

கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் கூடுதல் ரயில் இயக்க கோரிக்கை நெரிசலில் பயணியர் கடும் அவதி

கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் கூடுதல் ரயில் இயக்க கோரிக்கை நெரிசலில் பயணியர் கடும் அவதி

கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் கூடுதல் ரயில் இயக்க கோரிக்கை நெரிசலில் பயணியர் கடும் அவதி


ADDED : மே 29, 2024 12:34 AM

Google News

ADDED : மே 29, 2024 12:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் கூட்ட நெரிசல் அதிகரித்து வருவதால், இந்த தடத்தில் கூடுதலாக மின்சார பாஸ்ட் ரயில்களை இயக்க வேண்டுமென பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு தடத்தில், 200க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் தினமும் இயக்கப்படுகின்றன. இவற்றில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர். பயணியர் தேவைக்கேற்ப, கூடுதல் ரயில்கள் இல்லாததால், அலுவலக நேரங்களில் நெரிசலில் சிக்கி அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து ரயில் பயணியர் கூறியதாவது:

தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரையிலான புறநகர் பகுதிகளில் குடியிருப்புகள், தனியார் அலுவலகங்கள், நிறுவனங்கள் என, பல மடங்கு அதிகரித்து விட்டன.

இருப்பினும், போதிய அளவில் பொது போக்குவரத்து வசதி இல்லாமல் பயணியர் அவதிப்படுகின்றனர். தாம்பரம் - செங்கல்பட்டு இடையே, மூன்றாவது புது பாதை பயன்பாட்டிற்கு வந்தும், பெரியளவில் மின்சார ரயில்களின் சேவை அதிகரிக்கவில்லை. இதனால், கூட்ட நெரிசலில் சிக்கி பயணியர் அவதிப்படுகின்றனர்.

எனவே, காலை - மாலை அலுவலக நேரங்களில், செங்கல்பட்டு - சென்னை கடற்கரை தடத்தில், கூடுதலாக மின்சார பாஸ்ட் ரயில்கள் இயக்க வேண்டும். அப்போது தான், தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி செல்லும் ரயில்களில் பயணியர் கூட்ட நெரிசல் குறையும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us