/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
படன் படோலா சேலை ரூ.4.50 லட்சம் 'தறி' ஜவுளி கண்காட்சியில் விற்பனை
/
படன் படோலா சேலை ரூ.4.50 லட்சம் 'தறி' ஜவுளி கண்காட்சியில் விற்பனை
படன் படோலா சேலை ரூ.4.50 லட்சம் 'தறி' ஜவுளி கண்காட்சியில் விற்பனை
படன் படோலா சேலை ரூ.4.50 லட்சம் 'தறி' ஜவுளி கண்காட்சியில் விற்பனை
ADDED : மார் 08, 2025 12:32 AM
சென்னை, இந்திய கைவினை கவுன்சில் சார்பில், 'தறி' ஜவுளி விற்பனை இரண்டு நாள் கண்காட்சி, சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள வெல்கம் ஹோட்டலில் நேற்று துவங்கியது. கண்காட்சியில், நாட்டில் பல்வேறு மாநிலங்களில் இருந்து, 30 கைத்தறி நெசவாளர்கள் அரங்குகள் அமைத்துள்ளனர்.
இதில், குஜராத்தில் இருந்து, 'டபுள் இகாட்' முறையில் நெய்யப்பட்ட, 'படன் படோலா' சேலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. இவை, 1.5 லட்சம் ரூபாய் முதல் 4.50 லட்சம் ரூபாய் வரை விலை உள்ளவை. இந்த சேலைகளை, மூன்றுக்கும் மேற்பட்டோர் சேர்ந்து, ஆறு மாதம் வரை தயாரிப்பர். சேலையை இரு புறமும் பயன்படுத்தலாம்.
அதேபோல், லக்னோவில் இருந்து, 5,500 முதல் 1.20 லட்சம் ரூபாய் வரை உள்ள, வெஸ்ட் பெங்கால் ஜம்தானி சேலைகள்; தெலுங்கானாவில் இருந்து, 9,000 முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரை உள்ள ரிவைவல் சேலைகள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
புதுடில்லியில் இருந்து, 8,000 முதல் 45,000 ரூபாய் வரை உள்ள, கையால் அச்சிடப்பட்ட சேலைகள் மற்றும் ரெடிமேட் பிளவுஸ்; சத்தீஸ்கரில் இருந்து, 8,500 முதல் 22,000 ரூபாய் வரை உள்ள கோசலா சேலைகள்; பனாரசில் இருந்து, 8,000 முதல் மூன்று லட்சம் ரூபாய் வரை உள்ள நீலாம்பரி பட்டு மற்றும் காட்டன் சேலைகள் உள்ளன.
மத்திய பிரதேசத்தில் இருந்து, 10,000 முதல் 35,000 ரூபாய் வரை உள்ள சந்தரி பட்டு சேலைகள், கர்நாடகாவில் இருந்து, 2,000 முதல் 35,000 ரூபாய் வரை உள்ள, இகாட் சேலைகள், கேரளாவில் இருந்து, 3,000 முதல் 25,000 ரூபாய் வரை உள்ள, கைத்தறி சேலைகள், 2,000 முதல் 5,000 ரூபாய் வரை உள்ள வேஷ்டிகள் விற்பனைக்கு உள்ளன.
இதுதவிர பல்வேறு மாநிலங்களில் இருந்து, விதவிதமான ரகங்கள் விற்பனைக்கு உள்ளன. தறிகள் வாயிலாக தயாரிக்கப்பட்ட, இயற்கை வர்ணம் பூசப்பட்ட, சேலை மற்றும் துப்பட்டா போன்றவற்றை, பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
இரண்டு நாள் கண்காட்சி இன்று நிறைவடைகிறது. காலை, 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம். அனுமதி இலவசம்.
★★