/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உள்வாங்கிய வடிகால்வாய் மூடி விபத்து அச்சத்தில் பாதசாரிகள்
/
உள்வாங்கிய வடிகால்வாய் மூடி விபத்து அச்சத்தில் பாதசாரிகள்
உள்வாங்கிய வடிகால்வாய் மூடி விபத்து அச்சத்தில் பாதசாரிகள்
உள்வாங்கிய வடிகால்வாய் மூடி விபத்து அச்சத்தில் பாதசாரிகள்
ADDED : ஜூன் 13, 2024 04:45 PM
பெசன்ட் நகர்:அடையாறு மண்டலம், 179வது வார்டு, பெசன்ட் நகர், கங்கை தெரு 50 அடி அகலம் உடையது. இதில், மழைநீர் வடிகால்வாய், நடைபாதை உள்ளது. வடிகாலில், 30 அடி இடைவெளியில், துார் வாரும் வகையில் மூடி அமைக்கப்பட்டு உள்ளது.
தற்போது, மழைநீர் வடிகால்வாய் மூடி உள்வாங்கி உள்ளது. அதுமட்டுமல்லாமல், நடைபாதையும் சேதமடைந்து உள்ளது. இதனால், பாதசாரிகள் சாலையோரம் நடந்து செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர்.
இரவு நேரத்தில் முதியவர்கள், குழந்தைகள் கவனக்குறைவாக தடுக்கி விழும் அபாயம் உள்ளது. உள்வாங்கிய மூடி மற்றும் நடைபாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி வாசிகள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர்.
தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அசம்பாவிதம் ஏற்படாத வகையில், பகுதிமக்கள் வலை போட்டு மறைத்துள்ளனர். இரவில் மின்தடையின் போது, பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, உள்வாங்கிய மழைநீர் வடிகால்வாய் மூடியை மாற்றிவிட்டு, புதிதாக அமைக்க வேண்டும். மேலும், பாதசாரிகள் தடையின்றி நடக்கும் வகையில், நடைபாதையை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

