/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நெடுஞ்சாலை துறை அலட்சியம் விபத்தில் சிக்கும் பாதசாரிகள்
/
நெடுஞ்சாலை துறை அலட்சியம் விபத்தில் சிக்கும் பாதசாரிகள்
நெடுஞ்சாலை துறை அலட்சியம் விபத்தில் சிக்கும் பாதசாரிகள்
நெடுஞ்சாலை துறை அலட்சியம் விபத்தில் சிக்கும் பாதசாரிகள்
ADDED : மே 13, 2024 12:43 AM
சென்னை:அண்ணாசாலையில் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே சுரங்க நடைபாதைகள் மூடப்படுவதால், வேறு வழியின்றி ஒருபுறத்திலிருந்து மற்றொரு புறம் சாலையை கடக்கும் பாதசாரிகள் விபத்தில் சிக்கி தவித்து வருகின்றனர்.
சென்னையில் எந்தவித அச்சமும் இன்றி பாதசாரிகள் ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறம் கடப்பதற்காக ஆங்காங்கே சுரங்க நடைபாதைகளும், நடைமேம்பாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
அண்ணாசாலையில் மட்டும் 11 இடங்களில் சுரங்க நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும், காலை 5:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை மட்டுமே உபயோகத்திற்காக திறந்து வைக்கப்படும்.
ஒவ்வொரு சுரங்க நடைபாதைக்கும் ஒரு காவலாளி நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே சுரங்க நடைபாதைகள் மூடப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
குறிப்பாக, ஆயிரம்விளக்கு பகுதியில் துவங்கி தேனாம்பேட்டை வரை உள்ள சுரங்க நடைபாதைகள் 7:30 மணிக்கு முன்னதாகவே மூடப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் பாதசாரிகள் வேறு வழியின்றி மைய தடுப்பில் ஏறி குதித்து சாலையை கடக்கின்றனர்.
சில சமயங்களில் பாதசாரிகள் விபத்தில் சிக்கி கொள்வதோடு, வாகன ஓட்டிகளும் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரி குறிப்பிட்ட நேரத்தில் தான் சுரங்க நடைபாதை மூடப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.