/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'பிளாஸ்டிக் ரெய்டு' கடைகளுக்கு அபராதம்
/
'பிளாஸ்டிக் ரெய்டு' கடைகளுக்கு அபராதம்
ADDED : மே 30, 2024 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலையூர், தாம்பரம் மாநகராட்சி, 5வது மண்டலம் அகரம்தென் சாலை, மாடம்பாக்கம் சாலைகளில் உள்ள கடைகளில், சுகாதார அலுவலர் சாமுவேல் தலைமையில், நேற்று காலை பிளாஸ்டிக் ரெய்டு நடந்தது.
அப்போது, காய்கறி, பேக்கரி கடைகளில் இருந்து மூட்டை மூட்டையாக மறைத்து வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
அப்பகுதியில் 15க்கும் மேற்பட்ட கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில், 200 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக, 25,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.