/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெட்ரோ பணியால் இடையூறு பெரம்பூரில் மக்கள் ஆட்சேபம்
/
மெட்ரோ பணியால் இடையூறு பெரம்பூரில் மக்கள் ஆட்சேபம்
மெட்ரோ பணியால் இடையூறு பெரம்பூரில் மக்கள் ஆட்சேபம்
மெட்ரோ பணியால் இடையூறு பெரம்பூரில் மக்கள் ஆட்சேபம்
ADDED : மே 08, 2024 12:05 AM
பெரம்பூர், பெரம்பூரில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருவது தொடர்பாக, ரமணா நகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகளுக்கிடையே, கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில், மெட்ரோ அதிகாரிகள் குமரேசன், யோகானந்தம் விவேக் ஆகியோருடன், செம்பியம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விக்னேஷ்வரன், குடியிருப்பு சங்க நிர்வாகிகள் என பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், ரமணா நகரில் மெட்ரோ ரயில் நிலையம் வைத்துவிட்டு, அதற்கு பெரம்பூர் மார்க்கெட் என பெயர் வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ரயில் நிலையத்திற்கு ரமணா நகர் என பெயர் வைக்க, கோரிக்கை விடுத்தனர்.
மேலும், மெட்ரோ பணியால் வாகனங்கள் நிறுத்துவதிலும், குடிநீர் ஆதாரங்கள் பாதிக்கப்பட்டிருப்பது குறித்தும், பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். மெட்ரோ ரயில் பணியால் மூடப்பட்டுள்ள 50 கடைகளுக்கு இழப்பீடு வழங்கவும் கோரினர்.
ரயில் பணிகள் முடிய ஐந்து ஆண்டுகள் ஆகும் என்பதால், சிரமங்களை தவிர்க்க மாற்று ஏற்பாடு செய்து விட்டு, ரயில் பணிகளை செய்ய வேண்டும் என, மக்கள் கூறினர்.

