/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இரவு நேர மின் தடையால் தவிப்பு சைதையில் மக்கள் போராட்டம்
/
இரவு நேர மின் தடையால் தவிப்பு சைதையில் மக்கள் போராட்டம்
இரவு நேர மின் தடையால் தவிப்பு சைதையில் மக்கள் போராட்டம்
இரவு நேர மின் தடையால் தவிப்பு சைதையில் மக்கள் போராட்டம்
ADDED : மே 04, 2024 12:24 AM

சைதாப்பேட்டை, சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில், இரவு நேர மின் தடை தொடர்கதையாக உள்ளது. அடிக்கடி ஏற்படும் மின் தடையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி வருகிறது.
இந்த நிலையில், தொடரும் மின் தடையால் ஆத்திரமடைந்த சைதாப்பேட்டை பகுதிவாசிகள், 50க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் இரவு 10:30 மணி அளவில், சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் சுற்றுப்புற பகுதியில் சாலைக்கு வந்து, திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சமரசம் பேசியதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர். இதனால், சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது.
இது குறித்து, பகுதிவாசிகள் கூறியதாவது:
கோடை காலத்தில் மின் நுகர்வு அதிகரித்தாலும், அதற்கேற்ப மாநில உற்பத்தி மற்றும் மத்திய அரசின் தொகுப்பில் இருந்து தேவையான மின்சாரம் கிடைக்கவே செய்கிறது.
ஆனால், மின் வினியோகத்திற்கான கட்டுமானங்கள், கருவிகள், மின் மாற்றிகள் என அனைத்தும் தரம் குறைந்தவையாக இருப்பதே, அடிக்கடி மின் தடை ஏற்பட காரணமாக உள்ளது.
குறிப்பாக, மின் நுகர்வு அதிகரிக்கும்போதும், குறையும் போதும் தானியங்கி முறையில் மின்னழுத்தத்தை சரி செய்யும் கருவிகள் தரமற்றவையாக உள்ளன. இதுவே, அடிக்கடி மின் தடை ஏற்பட காரணம்.
சைதாப்பேட்டையில், இரவு வேளையில் குறைந்தது ஐந்து முறையாவது மின் தடை ஏற்படுகிறது. இதனால், குழந்தைகள், முதியோர், நோயாளிகள் துாக்கம் இன்றி தவிக்கின்றனர். மின் தடை ஏற்படும்போது மின் வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டால், போனை எடுப்பதே இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.