/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காலி நிலங்களில் கழிவுநீர் தேக்கத்தால் மக்கள் அவதி
/
காலி நிலங்களில் கழிவுநீர் தேக்கத்தால் மக்கள் அவதி
ADDED : மே 21, 2024 12:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்கு 18,000 குடியிருப்புகளில் 62,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
குன்றத்துார் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் இல்லை. இதனால், குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவு நீர், நகராட்சியில் ஆங்காங்கே காலியாக உள்ள இடங்களில் குட்டை போல் தேங்கி நிற்கிறது.
தற்போது, கோடை வெப்பத்தால், கழிவுநீர் வறண்டு துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்படுவதால், மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். குன்றத்துார் நகராட்சியில், பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- குன்றத்துார் மக்கள்

