/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏரியில் கழிவுநீர் கலந்தால் லட்சம் ரூபாய் அபராதம் பெருங்குடி சேர்மன் காட்டம்
/
ஏரியில் கழிவுநீர் கலந்தால் லட்சம் ரூபாய் அபராதம் பெருங்குடி சேர்மன் காட்டம்
ஏரியில் கழிவுநீர் கலந்தால் லட்சம் ரூபாய் அபராதம் பெருங்குடி சேர்மன் காட்டம்
ஏரியில் கழிவுநீர் கலந்தால் லட்சம் ரூபாய் அபராதம் பெருங்குடி சேர்மன் காட்டம்
ADDED : ஆக 15, 2024 12:16 AM
பெருங்குடி, பெருங்குடி மண்டலத்தில் 11 வார்டுகள் உள்ளன. புழுதிவாக்கத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில், சேர்மன் ரவிசந்திரன் தலைமையில், மண்டல குழு கூட்டம் நேற்று நடந்தது.
வார்டு கவுன்சிலர்கள், தங்கள் பகுதி முக்கிய பிரச்னைகள், நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள், விடுபட்ட பணிகள், மக்களின் எதிர்பார்ப்பு உள்ளிட்டவை குறித்து, சேர்மன் ரவிசந்திரனிடம் கோரிக்கை மற்றும் புகார்களை அளித்தனர்.
கவுன்சிலர்கள் கூறியதாவது:
வீராங்கல் ஓடையில் பல இடங்களில் மண் மேடுகள் உள்ளன. அதை அப்புறப்படுத்த வேண்டும். தவிர, ஓடையில் கழிவுநீர் விடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மடிப்பாக்கம் பிரதான சாலை 800 மீட்டர் துாரம் புழுதிவாக்கத்திற்கும், 370 மீட்டர் உள்ளகரத்திற்கும் உரியது. ஆனால், இதில் குளறுபடி உள்ளது.
எனவே, சாலையின் எல்லையை சரியாக குறிப்பிட்டு, தகவல் பலகை வைக்க வேண்டும்; அந்த சாலையை புதுப்பிக்க வேண்டும்.
குபேரன் நகர் 6வது தெருவில் மழைநீர் வடிகால் திட்டம் விடுபட்டு உள்ளது. தவிர, தனியார் கேபிள்கள் பல இடங்களில் தொங்கி, போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.
தெரு நாய் தொல்லை நிறைய உள்ளது. பழைய வடிகால்களுடன் புதிய வடிகால்களை முறையாக இணைக்க வேண்டும்.
டாஸ்மாக் மதுக்கூடம், தனியார் மண்டபங்கள், ஹோட்டல்களிலிருந்து அணை ஏரியில் கழிவுநீர் கலக்கிறது.
அதனால், தரைமட்டத்தில் உள்ள ஆறு கிணறுகளுக்கும் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்.
அண்ணா நகர் கால்வாயை பெரிதாக கட்ட வேண்டும். 47 இடங்களில் இணைப்பு கால்வாய் இல்லை.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
இதற்கு பதிலளித்து பேசிய சேர்மன் ரவிசந்திரன், 'ஏரியில் கழிவுநீர் கலப்போருக்கு, அதிகாரிகள் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும். கவுன்சிலர்கள் கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
மொத்தம் 47 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.