/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
5 ஆண்டாக மேம்படுத்தப்படாத பெருங்குடி ஏரி சீரழியும் அவலம்
/
5 ஆண்டாக மேம்படுத்தப்படாத பெருங்குடி ஏரி சீரழியும் அவலம்
5 ஆண்டாக மேம்படுத்தப்படாத பெருங்குடி ஏரி சீரழியும் அவலம்
5 ஆண்டாக மேம்படுத்தப்படாத பெருங்குடி ஏரி சீரழியும் அவலம்
ADDED : மார் 06, 2025 12:25 AM

பெருங்குடி, பெருங்குடி மண்டலம், வார்டு- 182க்கு உட்பட்ட பகுதியில், 57 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஏரி, பெருங்குடியின் இரு வார்டுகளுக்கும் நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது.
இந்த ஏரி, பத்து ஆண்டுகளுக்கு முன், அ.தி.மு.க., ஆட்சியில் துார்வாரி, சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. இரு ஆண்டுகளுக்கு முன், ஏரியில் குடிநீர் கிணறும் அமைக்கப்பட்டது.
சுற்றுச்சுவர் பாதிக்கும் மேல் உடைந்து, சேதமடைந்துள்ளது. ஏரியின் வடக்கு, தெற்கு பகுதிகளை இணைக்கும் நடைபாதை, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன், வெள்ள நீர் வெளியேற துண்டிக்கப்பட்டது. அது, தற்போது வரை இணைக்கப்படவில்லை.
இதனால், அப்பகுதியில் நடைபயிற்சி செல்வோர், பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு செடிகள் சூழ்ந்துள்ளதால், அப்பகுதியில் பல்வேறு சமூக விரோத செயல்கள் அரங்கேறுகின்றன.
தவிர, அப்பகுதியில் இயற்கை உபாதை கழிக்க பலர் வருவதால், அருகில் உள்ள பள்ளி மாணவர்கள் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
இந்த ஏரியின் வடக்கு, தெற்கு இணைப்பு நடைபாதை இணைக்கப்படாததால், பயன்பாடு குறைந்து சமூக விரோதிகளின் புகலிடமாக உள்ளது.
இவ்வேரியில், 'புட்பாத்' சுற்றுச்சுவர் அமைக்க, 10 கோடி ரூபாயில் அறிக்கை வந்தும், அது இன்னும் செயல்படுத்தப்படவில்லை.மண்டல குழுவில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
எனவே, முக்கிய நீர் ஆதாரமாக உள்ள இவ்ஏரியை மேம்படுத்த, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.