/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தங்கும் விடுதியில் மருந்தாளுனர் மர்ம மரணம்
/
தங்கும் விடுதியில் மருந்தாளுனர் மர்ம மரணம்
ADDED : ஆக 20, 2024 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, திருவல்லிக்கேணி, திப்பு சாகிப் தெருவில் உள்ள தங்கும் விடுதியில், 12 ஆண்டுகளாக வசித்து வந்தவர் அன்பழகன், 56. அவர், சிந்தாதிரிப்பேட்டை மின் வாரிய அலுவலகத்தில் அமைந்துள்ள மருத்துவமனையில், மருந்து கொடுக்கும் பணி செய்து வந்தார்.
நேற்று காலை, வெகு நேரமாகியும் அறையை விட்டு அவர் வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த தங்கும் விடுதி ஊழியர்கள், கதவை உடைத்து பார்த்த போது, படுக்கையில் இறந்து கிடந்தார்.
திருவல்லிக்கேணி போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஓமந்துாரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பிரேத பரிசோதனை முடிவுக்கு பிறகே இறப்பிற்கான காரணம் தெரியவரும் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.