/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
2ம் கட்ட மெட்ரோ ஆகஸ்டில் முதல் ரயில்
/
2ம் கட்ட மெட்ரோ ஆகஸ்டில் முதல் ரயில்
ADDED : ஜூன் 29, 2024 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னையில் நடந்து வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, ஆந்திரா மாநிலம் ஸ்ரீசிட்டியில் உள்ள 'அல்ஸ்டோம்' தொழிற்சாலையில் ரயில் பெட்டிகள் தயாரிப்பு நடந்து வருகிறது.
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் வழித்தட பணிகளை முடித்து, 2027க்குள் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளோம்.
ஸ்ரீசிட்டியில் உள்ள அல்ஸ்டோம் தொழிற்சாலையில் இருந்த, மூன்று பெட்டிகள் உடைய முதல் ரயில் ஆக., மாதத்தில் வருகிறது. இதற்கு அடுத்த மாதத்தில், மூன்று மெட்ரோ ரயில்கள் வரும். இதையடுத்து, சோதனை ஓட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

