நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடுங்கையூர், வேளச்சேரியைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 43; ஓட்டுனர். இவர், கடந்த ஏப்., 27ம் தேதி, கொடுங்கையூர், எத்திராஜ் சுவாமி சாலையில், சரக்கு வாகனத்தில் இருந்த இயந்திரங்களை இறக்கிக் கொண்டி இருந்தார்.
அப்போது, பைக்கில் வந்த மர்ம நபர், சரக்கு வாகனத்தில் இருந்த மொபைல் போனை திருடிச் சென்றார்.
இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரித்து, சம்பவத்தில் ஈடுபட்ட வியாசர்பாடி, பக்தவத்சலம் காலனியைச் சேர்ந்த பெயின்டரான முருகன், 25, என்பவரை நேற்று கைது செய்தனர்.

