/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பஸ் பயணியிடம் நகை திருடிய 'பிக்பாக்கெட் ராணி' சிக்கினார்
/
பஸ் பயணியிடம் நகை திருடிய 'பிக்பாக்கெட் ராணி' சிக்கினார்
பஸ் பயணியிடம் நகை திருடிய 'பிக்பாக்கெட் ராணி' சிக்கினார்
பஸ் பயணியிடம் நகை திருடிய 'பிக்பாக்கெட் ராணி' சிக்கினார்
ADDED : மே 05, 2024 12:29 AM

எம்.ஜி.ஆர்.நகர், சென்னை, எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்தவர் பாலமுருகன், 45; மாநகர பேருந்து நடந்துனர். இவரது மனைவி ராஜலட்சுமி, 40. இவர், கடந்த 23ம் தேதி கோயம்பேடில் இருந்து எம்.ஜி.ஆர்.நகருக்கு பேருந்தில் பயணம் செய்தார்.
பேருந்து வடபழனியை கடந்தபோது, டிக்கெட் எடுப்பதற்காக ராஜலட்சுமியின் அருகில் இருந்த பெண், அவரது மணி பர்சை திறந்தார். அப்போது, அதில் இருந்த சில்லரைகள் கீழே விழுந்து சிதறின. இதைக்கண்ட ராஜலட்சுமி கீழே குனிந்து, காசுகளை எடுத்து அப்பெண்ணிடம் கொடுத்தார்.
இதையடுத்து, பேருந்து அசோக் பில்லர் வந்ததும், அந்த பெண் இறங்கி சென்றுவிட்டார். அதைத்தொடர்ந்து, எம்.ஜி.ஆர்., நகர் வந்ததும் ராஜலட்சுமியும் இறங்கினார்.
அப்போது, தன் பையில் 18 சவரன் நகைகளுடன் இருந்த பர்ஸ் மாயமானதை கண்டு ராஜலட்சுமி அதிர்ச்சி அடைந்தார்.
அவரது அருகில் அமர்ந்திருந்த பெண், ராஜலட்சுமியின் கவனத்தை திசைத் திருப்பி நகையை திருடி சென்றிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது.
உடனே, இது குறித்து எம்.ஜி.ஆர்., நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார், அசோக் பில்லர் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது, பேருந்தில் இருந்து கீழே இறங்கிய அந்த பெண், மீண்டும் ஒரு ஆட்டோவில் ஏறி கோயம்பேடு சென்றது தெரியவந்தது.
தொடர் விசாரணையில், திருட்டில் ஈடுபட்டது, ஆந்திரா மாநிலம் குப்பம் பகுதியைச் சேர்ந்த பிரபல 'பிக்பாக்கெட் ராணி' விமலா, 30, என தெரியவந்தது. இதையடுத்து, வேலுாரில் பதுங்கி இருந்த விமலாவை போலீசார், நேற்று கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.
பேருந்து பயணியரின் கவனத்தை திசைத்திருப்பி திருடுவதே, விமலாவின் வழக்கம். இவர், கூட்டாளிகளுடன் சேர்ந்து தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கைவரிசை காட்டி வந்தார். இவரது கணவர் குழந்தைகளை பார்த்துக்கொள்ள, இவர் திருட்டில் ஈடுபட்டு, அதில் வரும் வருமானத்தை வைத்து குடும்பத்துடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். கண்காணிப்பு கேமரா மற்றும் மொபைல் போன் சிக்னல் வைத்து அவரை கண்டுபிடித்து கைது செய்தோம்.
- எம்.ஜி.ஆர்., நகர் போலீசார்