/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாலத்தின் கீழ் குப்பை குவிப்பு ஜாபர்கான்பேட்டையில் சீர்கேடு
/
பாலத்தின் கீழ் குப்பை குவிப்பு ஜாபர்கான்பேட்டையில் சீர்கேடு
பாலத்தின் கீழ் குப்பை குவிப்பு ஜாபர்கான்பேட்டையில் சீர்கேடு
பாலத்தின் கீழ் குப்பை குவிப்பு ஜாபர்கான்பேட்டையில் சீர்கேடு
ADDED : மே 13, 2024 01:41 AM
மேற்கு ஜாபர்கான்பேட்டை:மேற்கு ஜாபர்கான்பேட்டை மேம்பாலத்தின் கீழ், சர்வீஸ் சாலையில் குவிக்கப்பட்டுள்ள குப்பையை அகற்றி, மேம்பாலத்தின் கீழ் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை, ஈக்காட்டுத்தாங்கல் -- அசோக் நகர் 100 அடி சாலையில், காசி திரையரங்கம் அருகே, அடையாறு செல்கிறது.
இந்த அடையாற்றின் குறுக்கே, 100 அடி சாலை செல்ல, 50 அடி அகல மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள், விமான நிலையம் செல்லும் வாகனங்களுக்கு முக்கிய வழித்தடமாக இது உள்ளது.
இந்த மேம்பாலத்தின் கீழ் பல ஆண்டுகளுக்கு முன், அடையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட தரைப்பாலங்கள் இருந்தன.சில ஆண்டுகளுக்கு முன் பொதுப்பணித் துறையால், தரைப்பாலம் இடித்து அகற்றப்பட்டது.
இந்நிலையில், ஈக்காட்டுத்தாங்கலில் இருந்து அசோக் நகர் செல்லும் பாதையில், மேம்பாலத்தின் கீழ் உள்ள சர்வீஸ் சாலையோரம் குப்பை மற்றும் அங்குள்ள தொழிற்சாலைகளின் கழிவுகள் கொட்டி குவிக்கப்பட்டு உள்ளன.
இந்த குப்பையில் உள்ள துாசு காற்றில் பறந்து, இருசக்கர வாகன ஓட்டிகள் கண்களில் விழுந்து எரிச்சல் ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, மேம்பால சாலையில் உள்ள குப்பை மேட்டை அகற்றுவதுடன், மேம்பாலத்தின் கீழ் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.