/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டி - 20யில் 'பிங்க் வாரியர்ஸ்' வெற்றி சில்வர் ஸ்டிரைக்கர்ஸ் அணி ஏமாற்றம்

ADDED : ஜூலை 01, 2024 01:00 AM
சென்னை:டி.என்.சி.ஏ., எனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், மகளிருக்கான பிரேயர் டி - 20 கிரிக்கெட் போட்டிகள், தரமணி மற்றும் செங்குன்றம் தனியார் கல்லுாரி மைதானங்களில் நடக்கின்றன.
இதில், மாநிலம் முழுதும் இருந்து 30க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றுள்ளன. நேற்று முன்தினம் நடந்த முதல் போட்டியில், 'பிங்க் வாரியர்ஸ்' அணியை எதிர்த்து 'சில்வர் ஸ்டிரைக்கர்ஸ்' அணி களமிறங்கியது.
முதலில் ஆடிய பிங்க் வாரியர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரோஷிணி 41 ரன்கள் சேர்த்தார்.
அடுத்து களமிறங்கிய சில்வர் ஸ்டிரைக்கர்ஸ் அணி வீராங்கனை அனுஷா அதிரடியாக 46 ரன்கள் எடுக்க, மற்றவர்கள் சோபிக்கத் தவறினர். இதனால் அந்த அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழந்து 88 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதனால், 54 ரன்கள் வித்தியாசத்தில் பிங்க் வாரியர்ஸ் அணி அசத்தல் வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில் ஆரஞ்ச் டிராகன்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் ரெட் ரேஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.