/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குழாய் பதிப்பு அதிகாரிகள் உத்தரவு
/
குழாய் பதிப்பு அதிகாரிகள் உத்தரவு
ADDED : ஜூலை 02, 2024 12:33 AM

சோழிங்கநல்லுார், ஜூலை 2--
ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., உள்ளடக்கிய சோழிங்கநல்லுார் மண்டலத்தில், ஒன்பது வார்டுகள் உள்ளன. இங்கு, 554 கோடி ரூபாயில் குடிநீர், கழிவுநீர் திட்ட பணிகள் நடக்கின்றன. மேலும், மழைநீர் வடிகால், மின்கேபிள், இயற்கை எரிவாயு குழாய் பதிப்பு போன்ற பணிகள் நடக்கின்றன.
சென்னை மாநகராட்சி தெற்கு வட்டார இணை கமிஷனர் அமித், குடிநீர் வாரிய நிர்வாக இயக்குனர் சரவணன் தலைமையிலான அதிகாரிகள், இப்பணி இடங்களை ஆய்வு செய்தனர்.
அப்போது, குடிநீர், கழிவுநீர் குழாய் பதிக்க வேண்டிய சாலைகள் குறித்து கேட்டனர். இதில், நுாக்கம்பாளையம் இணைப்பு சாலை மற்றும் சில தெருக்களில், குழாய் பதிப்பதில் உள்ள சிக்கல் குறித்து, பொறியாளர்கள் கூறினர்.
பழைய சாலைகளில் குழாய் பதித்து, அதை மாநகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும். அப்போது தான் அவர்கள், சாலை சீரமைப்பு பணியில் உடனடியாக ஈடுபட முடியும் என, குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் கூறினர்.