/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பொறியாளருக்கு மிரட்டல் பா.ம.க., பிரமுகர் கைது
/
பொறியாளருக்கு மிரட்டல் பா.ம.க., பிரமுகர் கைது
ADDED : ஜூலை 13, 2024 12:38 AM
ஆதம்பாக்கம், ஆதம்பாக்கத்தில், மேடவாக்கம்- - மவுன்ட் பிரதான சாலையில் இருந்து ஜீவன் நகருக்கு செல்ல, சிறு மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக, கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஏரிக்கரையில் உள்ள மூன்று ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டன. இதையடுத்து, இணைப்பு சாலைக்காக பாலம் அமைக்கும் பணி துவங்கியது.
இந்த பணிகளை நிறுத்தக்கோரி, பா.ம.க., மாநில செயற்குழு உறுப்பினர் பாஸ்கர், 45, என்பவர், அங்கு பணியில் இருந்த மாநகராட்சி மேம்பால பணி உதவி பொறியாளர் கோமதி பாஸ்கரை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இது குறித்து அவர் அளித்த புகாரின் படி, ஆதம்பாக்கம் போலீசார் பதிந்து விசாரித்தனர். இதில் சம்பவம் உறுதியானதை அடுத்து, பாஸ்கரை போலீசார் கைது செய்தனர். பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.