/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாணவிக்கு பாலியல் தொல்லை போதை வாலிபருக்கு 'போக்சோ'
/
மாணவிக்கு பாலியல் தொல்லை போதை வாலிபருக்கு 'போக்சோ'
மாணவிக்கு பாலியல் தொல்லை போதை வாலிபருக்கு 'போக்சோ'
மாணவிக்கு பாலியல் தொல்லை போதை வாலிபருக்கு 'போக்சோ'
ADDED : மார் 04, 2025 08:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னை மேற்கு சைதாப்பேட்டை பகுதியில், 35 வயது பெண், மென்பொருள் நிறுவனம் ஒன்றில், துாய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். அவரின், 14 வயது மகள், 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த மாணவிக்கு, பக்கத்து வீட்டைச் சேர்ந்த கார்த்திக், 35 என்ற போதை ஆசாமி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவரின் பிடியில் இருந்து மாணவி தப்பித்துள்ளார்.
சம்பவம் குறித்து மாணவியின் தாய், சைதாப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரித்து, 'போக்சோ' சட்டத்தின் வழக்குப்பதிந்து, கார்த்திக்கை கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.