/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுமியரிடம் அத்துமீறல் மூவருக்கு ‛ ' போக்சோ'
/
சிறுமியரிடம் அத்துமீறல் மூவருக்கு ‛ ' போக்சோ'
ADDED : ஜூலை 01, 2024 01:20 AM
ஓட்டேரி:ஓட்டேரி அடுத்த, பட்டாளம் பகுதியைச் சேர்ந்தவர் காந்தி, 38; வேன் டிரைவர். நேற்று முன்தினம் மாலை, ஓட்டேரியை சேர்ந்த, 10 வயது சிறுமியை தன் வீட்டிற்குள் அழைத்து சென்று, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அவரிடம் இருந்து தப்பிய சிறுமி, தன் பெற்றோரிடம் தெரிவித்தார்.
அதே நாளில், மற்றொரு சம்பவத்தில், ஓட்டேரியை சேர்ந்த பெயின்டர் ஜாகீர், 37, என்பவர், அவரது வீட்டருகே தனியாக இருந்த, 16 வயது வடமாநில சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இரு சிறுமியரின் புகாரை பெற்ற ஓட்டேரி போலீசார், குழந்தைகளை பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாக்கும் 'போக்சோ' சட்டத்தில், காந்தி மற்றும் ஜாகீர் ஆகிய இருவரையும், நேற்று கைது செய்தனர்.
l அதேபோல், மேடவாக்கம் அடுத்த பெரும்பாக்கம் எழில் நகரைச் சேர்ந்த பெயின்டர் அருள்ராஜ், 24, என்பவர், உடன் பணிபுரியும் சக தொழிலாளியின் 15 வயது மகளை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, கர்ப்பமாக்கி உள்ளார்.
சிறுமியின் பெற்றோர், கடந்த 23ம் தேதி, பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். நேற்று முன்தினம், போக்சோ வழக்கில் அருள்ராஜை கைது செய்த போலீசார், ஆலந்துார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.