/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போலீஸ் வாகனம் சூறை வி.சி., பிரமுகர்கள் கைது
/
போலீஸ் வாகனம் சூறை வி.சி., பிரமுகர்கள் கைது
ADDED : செப் 03, 2024 12:10 AM
ராயபுரம்,சென்னை பெருநகர காவல், மோட்டார் வாகன பிரிவில் வாகன ஓட்டுனராக பணிபுரிபவர் அருள் ஆரோக்கிய டென்னிஸ். இவர், உயர் நீதிமன்ற வளாக பாதுகாப்பு பணியில் இருந்த சி.எஸ்.ஐ.எப்., பெண் போலீசாரை, குடியிருப்பில் இறக்கி விட வந்தார்.
ராயபுரம், ஜி.எம்.பேட்டை, துறைமுக குடியிருப்பு பகுதியில் வந்தபோது, அங்கு மதுபோதையில் இருந்த ஆசாமிகள் தகராறில் ஈடுபட்டனர்.
'இந்த பகுதியில் போலீஸ் வாகனம் எதற்கு வருகிறது; நீ யார்...' எனக் கேட்டு மிரட்டி, அருள் ஆரோக்கிய டென்னிசிடம் வீண் தகராறில் ஈடுபட்டனர். மேலும், வாகனத்தின் வலதுபுற கண்ணாடியை கட்டையால் அடித்து நொறுக்கினர்.
ராயபுரம் போலீசாரின் விசாரணையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ராயபுரம், துலுக்கானத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த இளங்கோ, 55, ஜி.எம்.பேட்டை பிரதான தெருவைச் சேர்ந்த சாமுவேல் ஜெபராஜ், 46, உள்ளிட்டோர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவானோரை தேடி வருகின்றனர்.