/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முன்னுதாரணமான சிறுமிக்கு போலீஸ் பாராட்டு
/
முன்னுதாரணமான சிறுமிக்கு போலீஸ் பாராட்டு
ADDED : மே 13, 2024 01:48 AM

அண்ணா நகர்:அமைந்தகரை, திருவீதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சசிகலா, 50. இவர், சோனி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு, பணி முடிந்து அண்ணா நகரில் உள்ள டவர் பூங்கா பேருந்து நிறுத்தத்தில் ஆட்டோவிற்காக காத்திருந்தார். அப்போது தன்னிடம் இருந்த 13,000 ரூபாய், வெள்ளி கொலுசு உள்ளிட்டவை இருந்த பணப்பையை தவறவிட்டார்.
எங்கும் தேடியும் கிடைக்காததால், அண்ணா நகர் போலீசில் இரவு புகார் அளித்தார்.
இந்த நிலையில், அண்ணா நகர் டவர் பூங்காவில் தன் தந்தையுடன் வந்து விட்டு, அமைந்தகரை செல்ல பஸ் ஏறுவதற்காக வந்த பள்ளி மாணவி பூஜா, 16, என்பவர் பஸ் நிறுத்தத்தில் கிடந்த பணப்பையை கவனித்துள்ளார். அதை எடுத்து, அண்ணா நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
போலீசார், பணப்பையை தவறவிட்ட சசிகலாவை வரவழைத்து, அண்ணா நகர் துணை கமிஷனர் சீனிவாசன் முன்னிலையில் ஒப்படைத்தனர். மேலும், பஸ் நிறுத்தத்தில் கிடந்த பணப்பையை போலீசாரிடம் ஒப்படைத்த சிறுமி பூஜாவை போலீசார் பாராட்டி, சன்மானம் வழங்கினர்.