/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கமிஷனரிடம் போலீசார் 90 மனு வழங்கல்
/
கமிஷனரிடம் போலீசார் 90 மனு வழங்கல்
ADDED : மார் 12, 2025 02:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் நேற்று, காவலர் குறைதீர் முகாம் நடந்தது. அவர்களிடமிருந்து, 90 மனுக்களை கமிஷனர் அருண் பெற்றார்.
பெரும்பாலான போலீசார், இட மாறுதல், குடியிருப்பு ஒதுக்கீடு செய்தல், ஊதிய முரண்பாடு, சிறிய தண்டனையில் இருந்து விடுபடுவது தொடர்பாக மனுக்கள் அளித்தனர்.
இந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்த, சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.