/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தொழிலாளியிடம் பணம் பறித்த போலீஸ்காரர் கைது
/
தொழிலாளியிடம் பணம் பறித்த போலீஸ்காரர் கைது
ADDED : ஆக 05, 2024 12:50 AM
திருப்போரூர், காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அடுத்த குன்னப்பட்டு கிராமத்தில், ஜப்பான் சிட்டி தொழிற்பேட்டையில், வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.
நேற்று முன்தினம் இரவு மேற்கண்ட தொழிற்பேட்டையில், மானாமதி காவல் நிலைய போலீஸ்காரர் அஜித்குமார், 33, என்பவர் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, வட மாநில தொழிலாளர்கள் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தனர். அஜித்குமார், ஒருவரிடம் 1,000 ரூபாயை பறித்துள்ளார்.
இதுகுறித்து, அந்த தொழிலாளர்கள் அவர்களின் மேலாளரிடம் தெரிவித்துள்ளனர். நிறுவனம் சார்பில், மானாமதி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில், வட மாநில தொழிலாளர்களிடம் அஜித்குமார் பணம் பறித்தது உறுதியானது. இதையடுத்து மானாமதி போலீசார் வழக்கு பதிவு செய்து, அஜித்குமாரை கைது செய்தனர்.