/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பூந்தமல்லி - பரந்துார் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை அரசிடம் சமர்ப்பிப்பு - மெட்ரோ வரைபடம் போடவும்

ADDED : மார் 13, 2025 12:18 AM
சென்னை, பூந்தமல்லி - பரந்துார் மெட்ரோ விரிவான திட்ட அறிக்கை, தமிழக அரசிடம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அளித்துள்ளது.
சென்னையில் இரண்டாவது கட்டமாக, 118 கி.மீ., துாரத்துக்கு 63,246 கோடி ரூபாயில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன.
மாதவரம் - சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பணிமனை, மாதவரம் - சோழிங்கநல்லுார் வரை, அப்பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. அனைத்து பணிகளையும் 2028ல் முடிக்க, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி மெட்ரோ திட்டத்தில், பரந்துார் வரை 43 கி.மீ., மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க, சாத்தியக்கூறு அறிக்கை ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டது.
தமிழக அரசின் ஒப்புதலை தொடர்ந்து, இந்த திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி முடிந்துள்ளது. இந்த அறிக்கையை, தமிழக அரசிடம் மெட்ரோ ரயில் நிறுவனம் சமர்பித்துள்ளது.
இத்திட்ட அறிக்கையில், பூந்தமல்லியில் இருந்து செம்பரம்பாக்கம், தண்டலம், இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம் வழியாக பரந்துார் விமான நிலையம் வரை, வழித்தடம் அமைகிறது.
இந்த வழித்தடத்தின் மொத்தமுள்ள 52.94 கி.மீ., துாரத்தில் 20 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதன் மொத்த செலவு 15,906 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் முதற்கட்டமாக, பூந்தமல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரை, 8,779 கோடி ரூபாயில் 14 நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.