/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அடிப்படை வசதியற்ற பூவை வெளியூர் பஸ் நிறுத்தம்
/
அடிப்படை வசதியற்ற பூவை வெளியூர் பஸ் நிறுத்தம்
ADDED : மே 06, 2024 01:30 AM

பூந்தமல்லி:பூந்தமல்லி வெளியூர் பேருந்து நிறுத்தத்தில், அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டுமென, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.
சென்னை- - -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பூந்தமல்லி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே, வெளியூர் பேருந்து நிறுத்தம் உள்ளது.
இங்கு சென்னையில் இருந்து காஞ்சிபுரம், வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு, அரசு பேருந்துகள் இயங்கப்படுகின்றன.
ஏராளமான பயணியர், இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், இங்கு போதிய அளவில் நிழற்குடை இல்லை. குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லை.
பயணியர் நீண்ட நேரம் வெயிலில் காத்திருந்து, பேருந்து பிடிக்க வேண்டியுள்ளது. இதனால் பெண்கள், வயதானோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இதனால், இந்த பேருந்து நிறுத்தத்தில் போதிய இடவசதியுடன் இருக்கைகள் அமைத்து, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.