/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பிரபல பாடகி எஸ்.ஜே.ஜனனிக்கு 'சர்வதேச பெண் பாடகர்' விருது
/
பிரபல பாடகி எஸ்.ஜே.ஜனனிக்கு 'சர்வதேச பெண் பாடகர்' விருது
பிரபல பாடகி எஸ்.ஜே.ஜனனிக்கு 'சர்வதேச பெண் பாடகர்' விருது
பிரபல பாடகி எஸ்.ஜே.ஜனனிக்கு 'சர்வதேச பெண் பாடகர்' விருது
ADDED : ஆக 30, 2024 12:17 AM

ஜனனி
சென்னை, பிரபல பாடகி எஸ்.ஜே.ஜனனிக்கு, அமெரிக்காவில், 2024ம் ஆண்டிற்கான,'சர்வதேச பெண் பாடகர்' விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
அமெரிக்காவின், அட்லாண்டோவில் இயங்கும்,'ஐ.எஸ்.எஸ்.ஐ.,' எனும் சர்வதேச பாடகர் மற்றும் பாடலாசிரியர் சங்கம் சார்பில், ஆண்டுதோறும் பல்வேறு கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.
அதன்படி, 2024ம் ஆண்டிற்கான சர்வதேச விருதுகள் வழங்கும் விழா, அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா பகுதியில், கடந்த 24ம் தேதி நடந்தது.
விழாவில், 40க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சிறந்த பாடகர், பாடகி உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்ட பல்வேறு சிறந்த கலைஞர்களுக்கு, விருதுகள் வழங்கப்பட்டன.
அந்த வகையில், சர்வதேச பெண் பாடகி விருது, சென்னையைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளரும், பாடகியுமான எஸ்.ஜே.ஜனனிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. இவர், சமீபத்தில் வெளியான 'ரயில்' படத்தின் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
விருதை வழங்கிய ஐ.எஸ்.எஸ்.ஐ., நிறுவனர் டமானி டோவ்க்கு, ஜனனி நன்றி தெரிவித்தார். பல பிரபலங்களும், எஸ்.ஜே.ஜனனிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

