ADDED : ஆக 10, 2026 03:51 PM
அ நிறம் | அளவு
பாரிமுனை: சென்ட்ரல், பாரிமுனை, ராஜாஜி சாலை வழியாக, ராயபுரம் மேம்பாலத்தை நோக்கி, ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.
இச்சாலையின் திருப்பத்தில் நேற்று, 3 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறினர். போலீசார், பள்ளத்தைச் சுற்றி இரும்பு தடுப்புகள் அமைத்து, அசம்பாவிதம் ஏற்படாத வகையில் தடுத்தனர்.
பாதாள சாக்கடையின் ‘மேன்ஹோல்’ எனும் இயந்திர நுழைவு பகுதியை ஒட்டி இந்த பள்ளம் விழுந்துள்ளது. இது போல் அடிக்கடி பள்ளம் விழுவதாகவும், இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
