/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாதனாங்குப்பம் சந்திப்பில் சிக்னல் இல்லாததால் சிக்கல்
/
மாதனாங்குப்பம் சந்திப்பில் சிக்னல் இல்லாததால் சிக்கல்
மாதனாங்குப்பம் சந்திப்பில் சிக்னல் இல்லாததால் சிக்கல்
மாதனாங்குப்பம் சந்திப்பில் சிக்னல் இல்லாததால் சிக்கல்
ADDED : ஆக 20, 2024 01:04 AM

அம்பத்துார், கள்ளிக்குப்பம் - சூரப்பட்டு சாலை மற்றும் மாதனாங்குப்பம் சந்திப்பில், பீக் - ஹவர்சில் போக்குவரத்து போலீசார் இல்லாததால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால், அம்பத்துாரில் இருந்து புழல் செல்லும் வாகனங்களும்; மாதனாங்குப்பத்தில் இருந்து அம்பத்துார் வரும் வாகனங்களும்; புழலில் இருந்து அம்பத்துார் மற்றும் ஆவடி செல்லும் வாகனங்களும் ஒரே நேரத்தில் முட்டி மோதுவதால், அப்பகுதியில் நடந்து செல்லக்கூட முடியாத அளவிற்கு நெரிசல் ஏற்படுகிறது.
இங்கு போக்குவரத்து போலீசார் பணியில் இல்லாததால், சில சமயங்களில் வாகன ஓட்டிகளே களத்தில் இறங்கி, போக்குவரத்தை சீர்செய்து வருகின்றனர். மேலும், இங்கு போக்குவரத்து சிக்னல் இல்லாததும், நெரிசலுக்கு முக்கிய காரணமாக உள்ளன. போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- முத்துகுமார், அம்பத்துார்.