/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மனைவியை வெட்டிய கணவருக்கு 'காப்பு'
/
மனைவியை வெட்டிய கணவருக்கு 'காப்பு'
ADDED : ஆக 26, 2024 01:45 AM
எண்ணுார்:திருவொற்றியூர், கே.வி.கே.குப்பத்தைச் சேர்ந்தவர் உலகநாதன், 27; பெயின்டர். இவரது மனைவி லீனா, 24. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
உலகநாதனுக்கு குடிப்பழக்கம் இருப்பதால், மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு, அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இதனால், லீனா எண்ணுாரில் உள்ள தன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
நேற்று காலை மனைவியை பார்க்கச் சென்ற உலகநாதன், தாழங்குப்பம் சத்தியவாணி முத்துநகர் 11வது தெரு அருகே வரும்படி அழைத்துள்ளார்.
அவர் அங்கு வந்ததும், வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார். அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த உலகநாதன், தான் மறைத்து வைத்திருந்த காய்கறி வெட்டும் கத்தியால், லீனாவின் தலையில் வெட்டியுள்ளார்.
இதில் ரத்தக் காயம் ஏற்பட்டு, லீனா கூச்சலிட்டுள்ளார்.
உடனே அங்கிருந்தோர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து, தலையில் ஐந்து தையல்கள் போடப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து வழக்கு பதிவு செய்த எண்ணுார் போலீசார், உலகநாதனை கைது செய்தனர்.

