/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதை மாத்திரை விற்ற மூவருக்க 'காப்பு'
/
போதை மாத்திரை விற்ற மூவருக்க 'காப்பு'
ADDED : ஆக 15, 2024 12:19 AM
ராமாபுரம், ராமாபுரம் காவல் நிலைய எல்லையில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக, ராமாபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
சந்தேகத்தின்படி, ராமாபுரம் அன்னை சத்யா நகரிலுள்ள வினோத், 22, என்பவர் வீட்டில், நேற்று மாலை போலீசார் சோதனை செய்து, அவரிடம் விசாரித்தனர்.
இதில் அவர், முகலிவாக்கம் தனலட்சுமி நகரைச் சேர்ந்த சுதாகர், 28, என்பவரிடம் போதை மாத்திரை வாங்கியது தெரிந்தது. அங்கு சென்று சுதாகரை பிடித்து, அவரது வீட்டில் இருந்து 540 போதை மாத்திரை மற்றும் 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
சுதாகரிடம் விசாரித்த போது, செம்மஞ்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த கார்த்திக், 28, என்ற நண்பரிடம் வாங்கியதாக கூறியுள்ளார்.
இதையடுத்து, நேற்று கார்த்திக்கை பிடித்து விசாரித்த போது, சைதாப்பேட்டையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரிடம் போதை மாத்திரை வாங்கியதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து வினோத், சுதாகர், கார்த்திக் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.