/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'அல்வா' வழங்கி போராட்டம் அ.தி.மு.க., - மா.செ., மீது வழக்கு
/
'அல்வா' வழங்கி போராட்டம் அ.தி.மு.க., - மா.செ., மீது வழக்கு
'அல்வா' வழங்கி போராட்டம் அ.தி.மு.க., - மா.செ., மீது வழக்கு
'அல்வா' வழங்கி போராட்டம் அ.தி.மு.க., - மா.செ., மீது வழக்கு
ADDED : ஆக 29, 2024 12:11 AM
புதுவண்ணாரப்பேட்டை,
அ.தி.மு.க., வடசென்னை வடகிழக்கு மாவட்ட செயலர் ராஜேஷ் தலைமையில், கடந்த 26ம் தேதி, மறைந்த தமிழக முதல்வர் அண்ணாதுரையின், 116வது பிறந்த நாள் நிகழ்ச்சி நடந்தது.
அண்ணாதுரை பிறந்தநாள் விழா இனிப்பு வழங்குவதாக கூறி அனுமதி பெற்ற இந்நிகழ்ச்சியில், வடசென்னை வளர்ச்சி திட்டத்தை முறையாக செயல்படுத்தாமல், மக்களுக்கு தி.மு.க., அரசு அல்வா கொடுப்பதாக கூறி, பொதுமக்களுக்கு ராஜேஷ் 'அல்வா' வழங்கினார். அங்கு கூடிய நுாற்றுக்கணக்கானோர், அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.
இது குறித்த புகாரின் அடிப்படையில், சட்டவிரோதமாக கூடுதல், அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் செய்தல் ஆகிய பிரிவின் கீழ் அ.தி.மு.க., மாவட்ட செயலர் ராஜேஷ், மாவட்ட பொருளாளர் கணேசன் உள்ளிட்ட 150 பேர் மீது புதுவண்ணாரப்பேட்டை போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.