/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மீனவர் கைது கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
மீனவர் கைது கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 15, 2025 12:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காசிமேடு: ராயபுரத்தைச் சேர்ந்தவர் ஜோசப் ஜெகன், 46. ஜனவரியில், இவருக்கு சொந்தமான வாகனத்தில் கடம்பா, இறால், மீன்கள் ஏற்றப்பட்டு, காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு எடுத்து வரப்பட்டன.
அப்போது, சென்னை செங்கை சிங்காரவேலர் சிறிய விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்க செயலர் விஜேஷ், 42, வாகனத்தை வழிமறித்து, தகராறில் ஈடுபட்டார். இதனால், மோதல் ஏற்பட்டது.
போலீசார் விஜேைஷ கைது செய்தனர். இந்நிலையில், அவரது கைதை கண்டித்து, நேற்று சிலர் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அசம்பாவிதம் நடக்காமல் இருக்க, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

