/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பி.எஸ்.என்.எல்., நெட்வொர்க் முடக்கம்
/
பி.எஸ்.என்.எல்., நெட்வொர்க் முடக்கம்
ADDED : மே 04, 2024 12:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று, தொழில்நுட்ப கோளாறு காரணமாக காலை 6:00 மணி முதல் பி.எஸ்.என்.எல்., மொபைல் போன் சிக்னல், பிராட்பேண்ட், பாரத் பைபர் சேவைகள் முழுதும் முடங்கின.
இதனால் வாடிக்கையாளர்கள் அவதி அடைந்தனர். பின், காலை 11:00 மணிக்கு கோளாறு சரிசெய்யப்பட்டது.
சென்னை பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறுகையில், 'தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே சிக்னல் பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த சில மணி நேரங்களிலேயே சரி செய்துவிட்டோம்' என்றனர்.