/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புதுச்சேரி மது கலப்பு 'பார்' ஊழியர்கள் சிக்கினர்
/
புதுச்சேரி மது கலப்பு 'பார்' ஊழியர்கள் சிக்கினர்
ADDED : ஜூன் 30, 2024 12:27 AM
கொடுங்கையூர், கொடுங்கையூர், டி.ஹெச்.ரோடில் 'டாஸ்மாக் கடை எண்-04' உள்ளது. இதன் மதுக்கூடத்தில் புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து, தமிழக மதுபாட்டில்களில், 90 எம்.எல்., ஊற்றி, 80 ரூபாய்க்கு விற்றது தெரியவந்தது.
புகாரை அடுத்து கொடுங்கையூர் போலீசார், டாஸ்மாக் கடையில் நேற்று ஆய்வு செய்து, ஐந்து புதுச்சேரி மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும், மதுக்கூட ஊழியர் கருப்பையா என்பவர் மறைத்து வைத்திருந்த 14 சிறிய கஞ்சா பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
மதுக்கூடக் கண்காணிப்பாளரான, புதுக்கோட்டையை சேர்ந்த பூபதி ராஜா, 29, ஊழியர்கள் குமாரவேல், 44, கருப்பையா, 23 ஆகியோரை கைது செய்தனர்.

