/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
9 விக்கெட் வித்தியாசத்தில் பர்பில் பிளேசர்ஸ் வெற்றி
/
9 விக்கெட் வித்தியாசத்தில் பர்பில் பிளேசர்ஸ் வெற்றி
9 விக்கெட் வித்தியாசத்தில் பர்பில் பிளேசர்ஸ் வெற்றி
9 விக்கெட் வித்தியாசத்தில் பர்பில் பிளேசர்ஸ் வெற்றி
ADDED : ஜூன் 28, 2024 12:31 AM
சென்னை,டி.என்.சி.ஏ., எனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், பிரேயர் மகளிர் 'டி - 20' கிரிக்கெட் போட்டிகள், சென்னை தரமணி மற்றும் செங்குன்றம் பகுதியில் உள்ள தனியார் விளையாட்டு மைதானங்களில் நடக்கின்றன.
நேற்று, தரமணியில் நடந்த போட்டியில், பர்பில் பிளேசர்ஸ் மற்றும் ரெட் ரேஞ்சர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ரெட் ரேஞ்சர்ஸ் அணி முதலில் பேட் செய்து, 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு, 93 ரன்களை அடித்தது.
அடுத்து பேட் செய்த, பர்பில் பிளேசர்ஸ் அணி, 15.1 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டும் இழந்து, 96 ரன்களை அடித்து, ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மற்ற போட்டிகளில், ப்ளூ அவெஞ்சர்ஸ் அணி, 21 ரன்கள் வித்தியாசத்தில், சில்வர் ஸ்டிரைக்கர்ஸ் அணியும், கிரீன் இன்வேடர்ஸ் அணி, ஏழு ரன்கள் வித்தியாசத்தில் பின் வாரியர்ஸ் அணியையும் தோற்கடித்தன.