/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'பூர்விகா அப்ளையன்சஸ்' புது கிளை போரூரில் திறப்பு
/
'பூர்விகா அப்ளையன்சஸ்' புது கிளை போரூரில் திறப்பு
ADDED : ஏப் 27, 2024 12:17 AM

போரூர், நாட்டின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக 'பூர்விகா' உள்ளது. மொபைல் போன் விற்பனையில் கால் பதித்த இந்நிறுவனம், அதைத்தொடர்ந்து, 'டிவி, ஏசி' உள்ளிட்ட அனைத்து வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையில் 'பூர்விகா அப்ளையன்சஸ்' மூலம் தடம் பதித்து வருகிறது.
அந்த வரிசையில், 'பூர்விகா அப்ளையன்சஸ்' 16வது கிளை, போரூர் - ஆற்காடு சாலை, லட்சுமி நகர் பேருந்து நிறுத்தம் அருகே பிரமாண்டமாக உருவானது.
புதுக்கிளையை, பூர்விகா அப்ளையன்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி யுவராஜ் நடராஜன் மற்றும் நிர்வாக இயக்குனர் கன்னி யுவராஜ் ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர்.
இது குறித்து பூர்விகா அப்ளையன்சஸ் பொது மேலாளர் செந்தில் குமார் கூறியதாவது:
போரூரில், 30,000 சதுர அடி பரப்பளவில் மூன்று மாடி கட்டடத்தில், 16வது கிளையை திறந்துள்ளோம். திறப்பு விழா சலுகையாக, 'டிவி, பிரிஜ், வாஷிங் மிஷின் உள்ளிட்ட பொருட்கள் வாங்கும் போது, 30 -- 40 சதவீதம் தள்ளுபடி உள்ளது. அத்துடன், பரிசு பொருட்களும் வழங்கப்படுகிறது.
அத்துடன், 'கல்யாண காம்போ' சலுகை உள்ளது. அனைத்து பொருட்களையும் இ.எம்.ஐ.,யில் வாங்கலாம். மேலும், 5,000 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கியவர்கள், எங்கள் பூர்விகா இணையதளத்தில் கருத்துக்கள் தெரிவிக்கலாம்.
சிறந்த கருத்து தெரிவிப்பவர்களுக்கு, 2 மணி நேரத்திற்கு ஒரு முறை என, மொத்தம் 6 'ஏசி' பரிசாக வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

