/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பரங்கிமலை காவல் மாவட்ட ஆட்டோக்களில் 'கியூ-ஆர்' கோடு
/
பரங்கிமலை காவல் மாவட்ட ஆட்டோக்களில் 'கியூ-ஆர்' கோடு
பரங்கிமலை காவல் மாவட்ட ஆட்டோக்களில் 'கியூ-ஆர்' கோடு
பரங்கிமலை காவல் மாவட்ட ஆட்டோக்களில் 'கியூ-ஆர்' கோடு
ADDED : மார் 09, 2025 01:19 AM

ஆலந்துார், சென்னை போக்குவரத்து மற்றும் சட்டம் - ஒழுங்கு காவல்துறை சார்பில் சென்னை முழுதும் இயங்கும் ஆட்டோக்களில் பயணியர் பாதுகாப்பு கருதி,'கியூ- ஆர்' கோடு,'ஸ்டிக்கர்' ஒட்டும் பணியை முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் துவக்கி வைத்தார்.
பரங்கிமலை காவல் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட, 480 ஆட்டோக்களில்,'கியூ-ஆர்' கோடு,'ஸ்டிக்கர்' ஒட்டும் பணியை துணைக் கமிஷனர் சீனிவாசன் முதற்கட்டமாக, 45 ஆட்டோ களுக்கு கியூ ஆர் கோடு ஸ்டிக்கரை ஒட்டி துவக்கி வைத்தார்.
ஆட்டோ ஓட்டுநர் இருக்கையின் பின் பயணியருக்கு தெரியும் வகையில் ஒட்டப்படும், 'கியூ-ஆர்' கோடை மொபைல் போனில்,'ஸ்கேன்' செய்தால் ஆட்டோ ஓட்டுநர் விவரம், மொபைல் எண், முகவரி இருப்பிடம் உள்ளிட்டவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்றுவிடும்.
ஆட்டோ ஒட்டுநர்களுக்கு,' கியூ-ஆர்' கோடின் செயல்பாடு குறித்தும், அதன் நோக்கம் குறித்தும் போக்குவரத்து போலீசார் தெளிவுபடுத்தினர். விரைவில் சென்னையில் உள்ள அனைத்து ஆட்டோக்களில் இந்த, 'கியூ-ஆர்' கோடு ஒட்டப்படவுள்ளது.
பின், பெண் காவலர்களுடன் துணை கமிஷனர், மகளிர் தினத்தை கேக் வெட்டி கொண்டாடினார். மடிப்பாக்கம் உதவி கமிஷனர் முத்துராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
***