/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாமனை அடித்து கொன்ற மச்சான் அக்காவை தாக்கியதால் ஆத்திரம்
/
மாமனை அடித்து கொன்ற மச்சான் அக்காவை தாக்கியதால் ஆத்திரம்
மாமனை அடித்து கொன்ற மச்சான் அக்காவை தாக்கியதால் ஆத்திரம்
மாமனை அடித்து கொன்ற மச்சான் அக்காவை தாக்கியதால் ஆத்திரம்
ADDED : ஏப் 18, 2024 12:20 AM
பெரியபாளையம், பெரியபாளையம் அடுத்த வடமதுரை ஊராட்சி, பெரிய காலனியில் வசித்து வந்தவர் ஜெயபிரகாஷ், 40; கூலித்தொழிலாளி. இவரது மனைவி சியாமளா, 35. இவர்களுக்கு தமிழ்க்குமரன், 15, என்ற மகனும், ஸ்ரீஜா, 13, என்ற மகளும் உள்ளனர்.
கடந்த 14ம் தேதி கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஜெயபிரகாஷ் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், கோபித்துக் கொண்ட சியாமளா, மகன், மகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.
நேற்று முன்தினம் இரவு, சியாமளாவின் சகோதரர் அருள், 34, தன் நண்பர்கள் இருவருடன், ஜெயபிரகாஷ் வீட்டிற்கு சென்றார். அங்கு ஜெயபிரகாஷிடம் தகராறு செய்தார்.
வாய்த்தகராறு ஏற்பட்டு, பின்னர் கைகலப்பில் முடிந்தது. ஆத்திரமடைந்த அருள் மற்றும் அவரது நண்பர் சேர்ந்து, ஜெயபிரகாஷை இரும்பு ராடால் தாக்கி உள்ளனர்.
பலத்த காயங்களுடன் ஜெயபிரகாஷ், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி., கணேஷ்குமார் அங்கு விசாரணை நடத்தினார்.
கொலை சம்பவம் குறித்து விசாரிக்கும் பெரியபாளையம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

