/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரயில் செய்தியின் பாக்ஸ்/ 11 மின்சார ரயில்கள் கடைசி நேர ரத்தால் அவதி

ADDED : ஆக 25, 2024 12:17 AM
சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே ரயில் பாதை மேம்பாட்டு பணி நடப்பதால், நேற்று கடற்கரை - தாம்பரம் இரவு 9:10, 9:30, 10:40, 11:20, 11:40 உட்பட 11 ரயில்கள் ரத்து செய்வதாக நேற்று காலையில் திடீரென அறிவிக்கப்பட்டது. இதனால், பணிக்கு சென்று வீடு திரும்பும் பயணியர் நேற்று இரவு நேரத்தில் அவதிப்பட்டனர்.
இது குறித்து, பயணியர் சிலர் கூறியதாவது:
சென்னை புறநகரில் மின்சார ரயில் சேவை அத்தியாவசியமானது. இந்த சேவையை நம்பி தினமும் பல ஆயிரகணக்கானோர் வந்து செல்கின்றனர். ரயில்கள் ரத்து குறித்து முன்கூட்டியே அறிவிக்கப்பட்டால், மாற்று ஏற்பாடு செய்து கொள்ள வசதியாக இருக்கும். கடைசி நேரத்தில் ரயில்கள் ரத்து செய்வதால், பயணியர் கடுமையாக அவதிப்படுகின்றனர். இனியாவது, மின்சார ரயில்கள் ரத்தை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.